Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படத்தில் ரஜினியா?.... அதிர்ச்சியடைந்த மஞ்சு வாரியர்!

‘வேட்டையன்’ படத்தில் ரஜினியா?…. அதிர்ச்சியடைந்த மஞ்சு வாரியர்!

-

- Advertisement -

நடிகை மஞ்சு வாரியார் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர். இவர் தமிழில் தனுஷின் அசுரன், அஜித்தின் துணிவு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 'வேட்டையன்' படத்தில் ரஜினியா?.... அதிர்ச்சியடைந்த மஞ்சு வாரியர்!அடுத்தது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர். அதேசமயம் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய மஞ்சு வாரியர் வேட்டையன் படம் குறித்தும் ரஜினி குறித்தும் பேசியுள்ளார்.Rajini in Vettaiyan.... Manju Warrier shocked!அவர் பேசியதாவது, “அசுரன் படத்தில் நடிப்பதற்கு தனுஷ் என்னை அழைத்தார். துணிவு படத்தில் நடிப்பதற்கு ஹெச். வினோத் தான் என்னை அழைத்தார். நான் உடனே ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு தான் அஜித் சார் அந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது எனக்கு தெரிய வந்தது. அஜித் சார் நடிக்கிறார் என்பது எனக்கு மிகப்பெரிய போனஸ். அதேபோல் டிஜே ஞானவேல் அவருடைய அடுத்த படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகினார். அப்போது ஜெய் பீம் படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வமாக இருந்தேன். அதே சமயம் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிக்கிறார் என்பதும் நான் அதிர்ச்சியடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ