அட்லீ இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
அட்லீ தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் நுழைந்து ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தையும் இயக்கி பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் மாறி பல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தான் இயக்குனர் அட்லீ, சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அடுத்தது அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து கமல்ஹாசன் நடிக்கப்போவதில்லை அவருக்கு பதிலாக ரஜினி நடிக்க போகிறார் எனவும் சொல்லப்பட்டது. மேலும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் அட்லீ இயக்கத்தில் ரஜினி, சல்மான்கான் நடிக்க இருக்கும் தகவல் முழுவதும் வதந்தி என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அட்லீயின் அடுத்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.