நடிகர் ரஜினி, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினி. கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தினை 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். எனவே இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி என்ன படத்தில் நடிக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி சமீபகாலமாக ரஜினி, மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக செய்திகள் வெளியானது. பின்னர் மாரி செல்வராஜ், ரஜினியை இரண்டு முறை சந்தித்து பேசியதாகவும் ஆனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில்தான் அடுத்ததாக நடிகர் ரஜினி, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் ரஜினியே இது தொடர்பாக பேசுவதற்காக வெற்றிமாறனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெற்றிமாறன்=, ரஜினிக்காக புதிய ஸ்கிரிப்ட் தயார் செய்வதாகவும் புதிய தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களின் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.