நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21 வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த படமானது செப்டம்பர் 27 அன்று திரையிடப்படும் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் நிறைந்த கதை களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான சபீர் கல்லாரக்கல் SK23 இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் விக்ராந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் விக்ராந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.