Homeசெய்திகள்சினிமா'நட்புக்கொரு இலக்கணமாக திகழ்ந்தவர்'.... கண்ணீருடன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் ரஜினி!

‘நட்புக்கொரு இலக்கணமாக திகழ்ந்தவர்’…. கண்ணீருடன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் ரஜினி!

-

'நட்புக்கொரு இலக்கணமாக திகழ்ந்தவர்'.... கண்ணீருடன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் ரஜினி!உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு வந்த விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா காரணமாக உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவை எண்ணி தமிழகமே சோகத்தில் உள்ளது. தற்போது இறுதி அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பலரும் படையெடுத்து வந்து விஜயகாந்த் க்கு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அரசியல் பிரமுகர்களும் திரைப்படங்களும் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தீவுத்திடலுக்கு வருகை தந்துள்ளார். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் இரு மகன்கள் ஆகியோருக்கும் தனது ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “நட்புக்கொரு இலக்கணமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். யாரிடம் பழகினாலும் அவர்களை எளிதில் மறக்க மாட்டார். கேப்டன் என்பது அவருக்கு பொருத்தமான பெயர். விஜயகாந்த் கோபப்பட்டார் என்றால் அதன் பின் நியாயமான காரணமும் அன்பும் இருக்கும். வாழ்க விஜயகாந்த் நாமம்” என்று பேசியுள்ளார். மேலும் ரஜினி, விஜயகாந்த் குறித்து சில நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.

MUST READ