காளைக்கே கொம்ப சீறிபுட்ட…..ஜெயிலரின் ஜுஜுபி பாடல் வெளியானது!

ஜெயிலர் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.

ரஜினி மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ் குமார், மோகன் லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சிலை கடத்தல் சம்பந்தமான கதைகளத்தில் உருவாகியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் கசிந்திருந்தன. இதன் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலான ஜூஜூபி என்னும் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதி இருக்கிறார். பாடகி தீ பாடியுள்ளார். ஒரு மாஸான பாடலாக வெளிவந்துள்ளது.இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement