Homeசெய்திகள்சினிமாஇரண்டு விதமான லுக்கில் ரஜினி..... இன்று முதல் 'கூலி' படப்பிடிப்பு ஆரம்பம்!

இரண்டு விதமான லுக்கில் ரஜினி….. இன்று முதல் ‘கூலி’ படப்பிடிப்பு ஆரம்பம்!

-

நடிகர் ரஜினி ஜெயலலிதா படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இரண்டு விதமான லுக்கில் ரஜினி..... இன்று முதல் 'கூலி' படப்பிடிப்பு ஆரம்பம்! டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனிருத் இதற்கு இசையமைக்கவுள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகும் இந்த படமானது அதிரடி ஆக்சன் படமாக தயாராக இருக்கிறது. அதே சமயம் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்தில் ரஜினி நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறார். அதன்படி தனது வில்லன் கலந்த ஹீரோயிஷத்தை கூலி படத்தில் காட்டவுள்ளார் ரஜினி.
இந்நிலையில் இன்று (ஜூலை 5) ஐதராபாத்தில் கூலி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.இரண்டு விதமான லுக்கில் ரஜினி..... இன்று முதல் 'கூலி' படப்பிடிப்பு ஆரம்பம்! அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் ரஜினி, இரண்டு விதமான லுக்கில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் டெஸ்ட் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினி காலா பட லுக்கில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினியின் மற்றொரு லுக் கண்டிப்பாக மாஸான லுக்காக தான் இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ