Homeசெய்திகள்சினிமாரஜினி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்.... மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

ரஜினி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்…. மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரஜினி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்.... மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் அடிவயிறு வீக்கம், ரத்தக்குழாயில் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளினால் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. மேலும் முழு உடல் பரிசோதனைக்காக ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ரஜினி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்.... மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!அந்த அறிக்கையில், ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வீக்கம் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ரஜினிக்கு வீக்கத்திற்கான சிகிச்சையாக  ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை பெருமூச்சு விடச் செய்துள்ளது.

MUST READ