Homeசெய்திகள்சினிமாசினிமா உலகே வியக்கும் அப்டேட்! ரஜினி - அமிதாப்பச்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

சினிமா உலகே வியக்கும் அப்டேட்! ரஜினி – அமிதாப்பச்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

-

- Advertisement -

ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெய்லர்‘ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அதே சமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால்சலாம்’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ரஜினி தனது அடுத்த படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் திசையிலும் உருவாக உள்ளது.

இந்தப் படம் ஜெய் பீம் படத்தைப் போலவே உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் கூடுதல் தகவலாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் ரஜினிக்கு இணையானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினியும் அமிதாபச்சனும் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஹம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 32 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி ‘தலைவர் 170’ திரைப்படத்தில் இணையவுள்ளது.
இந்த தகவல் பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ