கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் ஆரம்பத்தில் பல குறும்படங்களை இயக்கி பலரின் பாராட்டுகளைப் பெற்றார். அதன் பிறகு இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் அதன் பிறகு இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து தனது இரண்டாவது படத்தை இயக்கியிருந்தார் நித்திலன் சாமிநாதன். அந்தப் படம் தான் மகாராஜா. இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தார். மேலும் அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நடராஜ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய முனீஸ் காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று குறுகிய நாட்களிலேயே 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்படம் வெற்றிகரமான 50 வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. அதே சமயம் திரை பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி வந்தனர். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
Dear super star @Rajinikanth sir, thank you for the charismatic meeting. it was like reading a novel of life, experience, understanding of the way of living from the golden hands of Kollywood..
I am awestruck by your hospitality and humility. I am touched to know how much you… pic.twitter.com/HbcvFsBLR4— Nithilan Saminathan (@Dir_Nithilan) August 2, 2024
இது குறித்து நித்திலன் சாமிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். “அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். உங்களை சந்திக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. கோலிவுட்டின் தங்க கரங்களிலிருந்து வாழ்க்கை, அனுபவம் பற்றிய நாவலை படிப்பது போன்று இருந்தது. உங்களின் விருந்தோம்பல் மற்றும் பணிவு கண்டு நான் வியப்படைக்கிறேன். மகாராஜா படத்தை நீங்கள் எந்த அளவிற்கு நேசித்துள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி மற்றும் வாழ்க தலைவர்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.