Homeசெய்திகள்சினிமாஉங்களால் இந்தியாவிற்கே பெருமை.... இளையராஜாவை வாழ்த்திய ரஜினிகாந்த்!

உங்களால் இந்தியாவிற்கே பெருமை…. இளையராஜாவை வாழ்த்திய ரஜினிகாந்த்!

-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவை வாழ்த்தி உள்ளார்.உங்களால் இந்தியாவிற்கே பெருமை.... இளையராஜாவை வாழ்த்திய ரஜினிகாந்த்!

தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா. அவருடைய அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு அழைத்து வரப்பட்ட இவர் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்து தனது இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார். அந்த வகையில் இசைஞானி என்று அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படும் இளையராஜாவை இந்திய அளவில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜா வேலி அண்ட் என்ற தலைப்பில் உருவாக்கி இருக்கும் முதல் சிம்போனி நிகழ்ச்சியை இன்று (மார்ச் 8) லண்டனில் அரங்கேற்றுகிறார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தரக்கூடிய இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் போன்ற திரைப் பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள் இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி உங்களால் இந்தியாவிற்கே பெருமை. என்னுடைய பாராட்டுகள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ