நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக படக்குழு திருவனந்தபுரம் சென்றுள்ளது. அங்கு பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் திருவனந்தபுரம் வருவதை அறிந்த ரசிகர்கள் விஜயை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வந்தது. இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், திருவனந்தபுரம் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது ரஜினி தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் ரஜினி போலீஸ் கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி படப்பிடிப்புகளும் 80 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாளை வேட்டையன் படத்தில் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி திருவனந்தபுரம் செல்ல இருக்கிறாராம். அங்கு இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனவே படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -