Homeசெய்திகள்சினிமாராமர் கோயில் திறப்பை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்.... சர்ச்சைக்கு ரஜினி விளக்கம்... ராமர் கோயில் திறப்பை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்…. சர்ச்சைக்கு ரஜினி விளக்கம்…
- Advertisement -
அயோத்தி ராமர் கோயிலில் ரஜினி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை வந்தடைந்த ரஜிநி மீண்டும் பேட்டி அளித்துள்ளார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த இந்தியாவும் காத்திருந்த கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவிட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. பாபர் மசூதி அகற்றப்பட்டு அங்கு கோயில் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கியது. இதையடுத்து, பல கோடி செலவு செய்து கோயிலை கட்டிமுடித்து, அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, நாட்டில் உள்ள பிரபலங்கள், நட்சத்திரங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராமர் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இதையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டது. . உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், மக்களும் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த லட்சக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நடிகர் ரஜினிகாந்தும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

அயோத்தியில் பேட்டி அளித்த ரஜினி, 500 ஆண்டு கால அரசியல் முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் சென்னை வந்தடைந்த ரஜினி பேசியபோது, நான் இதை ஆன்மிக பயணமாகத் தான் பார்க்கிறேன். ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொன்றாக இருக்கும் என தெரிவித்தார்.