Homeசெய்திகள்சினிமா'நந்தன்' திரைப்படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்

‘நந்தன்’ திரைப்படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்

-

'நந்தன்' திரைப்படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்‘நந்தன்’ திரைப்படத்தை பார்த்து நடிகர் சசிகுமார், இயக்குநர் ரா.சரவணன், விநியோகஸ்தர் ‘டிரைடண்ட்’ ரவி ஆகியோரை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரா.சரவணன் எழுதி இயக்கி சசிக்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் நந்தன்.இத்திரைப்படத்தில், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  இப்படம் செப்.20ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், சமீபத்தில் ஓடிடியிலும் வெளியானது. இப்படத்திற்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இப்படம் பேசியுள்ளது.இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார்.

‘நந்தன்’ திரைப்படத்தை ஓடிடியில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘மிகத் தரமான, தைரியமான திரைப்படம்’ எனப் பாராட்டியுள்ளார்.  கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி இப்படம் விவாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அடுத்த படம் ‘ஜெயிலர் 2’ தான்…. உறுதி செய்த நெல்சன்!

MUST READ