நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். காலை 10 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த தூய்மை இந்தியா இயக்கத்தில் பாஜக தலைவர்கள் ,அமைச்சர்கள், முதல்வர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு இந்தியாவை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். மேலும் பிரதமர் மோடி, ‘தூய்மை இந்தியா நம் அனைவரின் பொறுப்பு’ என்று கூறியுள்ளார்.
A healthy environment begins with a clean environment..Let’s keep India clean… #SwachhBharat @SwachhBharatGov
— Rajinikanth (@rajinikanth) October 1, 2023
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆரோக்கியமான சூழல் தூய்மையான சூழலில் தான் தொடங்குகிறது. இந்தியாவை தூய்மையாக வைத்திருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.