விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் லால் சலாம் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷூடன் 3 திரைப்படம், அடுத்து கௌதம் கார்த்திக்குடன் வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கி இருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். இது தவிர பலர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்தனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி அண்மையில் நடைபெற்று முடிந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கிரிக்கெட்டை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது.
லால் சலாம் திரைப்படம் வரும் மார்ச் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது.