Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து புதிய சிக்கல்களை சந்திக்கும் லால் சலாம்

அடுத்தடுத்து புதிய சிக்கல்களை சந்திக்கும் லால் சலாம்

-

- Advertisement -
விளையாட்டில் மத அரசியலை புகுத்துவதாக கூறி லால் சலாம் படத்திற்க்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா அடுத்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும், படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். லால் சலாம் திரைப்படம் வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாவதற்கு முன்பாகவே, படத்திற்கு அடுத்தடுத்து புதிய சிக்கல்கள் உருவாகி வருகின்றன.

தொடக்கத்தில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தன்யா பாலகிருஷ்ணனால் சிக்கல் வந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தமிழக மக்கள் குறித்து இழிவாக பேசியதாக படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், லால் சலாம் படத்தை குவைத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் விளையாட்டு தொடர்பான மத அரசியல் பேசப்பட்டு உள்ளதாக கூறி தடை விதிக்க உள்ளதாக தெரிகிறது. படம் வெளியாவதற்கு 4 நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து பல சிக்கல்கள் உருவாகி வருகின்றன.

MUST READ