- Advertisement -
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தலைவர் 171 படத்தின் அப்டேட் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ரஜினிகாந்த், இந்த ஆண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்திற்கு பிறகு ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, நெல்லை, மும்பை, புதுவை என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அண்மையில் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே நேற்று ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்று வருகிறது லால் சலாம் திரைப்படம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
The majestic and energetic walk as always
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#Rajinikanth𓃵 | #Rajinikanth | #SuperstarRajinikanth | #superstar @rajinikanth | #Jailer | #LalSalaam | #LalsalaamBlockbuster | #Vettaiyan | #LalSalaamReview | #Thalaivar171pic.twitter.com/PL35kTIY5u
— Suresh balaji (@surbalutwt) February 10, 2024