நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.
மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 24ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் ஜூலை 2ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நெல்சன் திலீப் குமாரின் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ திரைப்படங்களின் முதல் பாடல் வெளியாகும் முன் ஒரு கலகலப்பான ப்ரொமோஷன் வீடியோ வெளியிடப்பட்டது. அனிருத், நெல்சன் சிவகார்த்திகேயன் கூட்டணியில் இந்த வீடியோ உருவாகி இருந்தது. இந்த ஃபர்ஸ்ட் சிங்கள் அனவுன்ஸ்மென்ட் வீடியோ மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. குறிப்பாக ‘அரபிக்குத்து’ பாடல் ப்ரோமோஷன் வீடியோவில் விஜய் ஃபோன் காலில் பேசுவது போன்று அமைக்கப்பட்டு இருந்தாலும் மிகவும் கலகலப்பாக அமைந்தது. மேலும் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது.
தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடலின் பிரமோஷனுகாக இது போன்ற கலகலப்பான வீடியோ ஒன்று தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஜெயிலர் படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ள நிலையில் நெல்சன், அனிருத், இவர்களுடன் சிவகார்த்திகேயனும் இந்த வீடியோவில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த கலகலப்பான வீடியோவில் ரஜினியும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு உண்மையானால் ரசிகர்களுக்கு இது ஒரு பேரின்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.