Homeசெய்திகள்சினிமாநாளை ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் 'ஜெயிலர்'!

நாளை ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் ‘ஜெயிலர்’!

-

- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நாளை ஜப்பானில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.நாளை ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் 'ஜெயிலர்'!

கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தையும் எடுக்க திட்டமிட்டு வருகிறார் நெல்சன். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜெயிலர் 2 படம் தொடர்பான ப்ரோமோ வெளியாகிய இணைத்தை கலக்கி வருகிறது. படப்பிடிப்புகளும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் நாளை (பிப்ரவரி 21) ஜப்பானில் வெளியாக இருக்கிறதாம். நாளை ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் 'ஜெயிலர்'!ஏற்கனவே கடந்த 1998 இல் ரஜினி நடித்திருந்த முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியாகி ஜப்பான் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எனவே ஜப்பானிலும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். முத்து திரைப்படத்திற்கு பிறகு ரஜினியின் மற்ற சில திரைப்படங்களுக்கும் ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படமும் ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ