ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
ரஜினி இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக ரஜினிகாந்த், தமன்னா, நெல்சன் திலிப் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா அளவில் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.