Homeசெய்திகள்சினிமாஇறுதி கட்டத்தை நெருங்கிய ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு!

இறுதி கட்டத்தை நெருங்கிய ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

-

இறுதி கட்டத்தை நெருங்கிய ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் 605 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கி வரும் படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், ராணா, பகத் பாஸில், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிக்கின்றனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரஜினி இந்த படத்தில் இஸ்லாமிய போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.இறுதி கட்டத்தை நெருங்கிய ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு!

இப்படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைந்து விடும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
.

MUST READ