சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 600 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்ததை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வந்தார் ரஜினி. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரஜினி தனது போர்ஷன்களை முடித்து விட்டார். அடுத்ததாக விரைவில் டப்பிங் பணிகளை தொடங்க இருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பு இன்னும் 18 நாட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படமானது அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று சமூக வலைதளங்களில் சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் பட குழுவினர் இன்னும் ரிலீஸ் தேதியை லாக் செய்யவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதே நாளில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் திரையிடப்படுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது? அதுமட்டும் இல்லாமல் படப்பிடிப்பும் இன்னும் முடிவடையாத நிலையில் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.