சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் எனும் திரைப்படம் வெளியானது. டிஜே ஞானவேல் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெயர் வரவேற்பை பெற்றது. அடுத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் படப்
பிடிப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி ரஜினியின் கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் சிவகார்த்திகேயனின் SK 23 திரைப்படமும் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அதை கொண்டாடுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.