ரஜினியின் சிவாஜி திரைப்படம் தெலுங்கில் மீண்டும் ரீரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான சிவாஜி திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் வெற்றி பெற்றது. ஷ்ரேயா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கருப்பு பணத்தை ஒழிக்கும் சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டினார் ரஜினி.
இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு மெகா கமர்சியல் ஹிட் ஆக அந்த படம் அமைந்திருந்தது. அப்போதே படம் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. அந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அளவுக்கு ஷங்கர் அருமையாக திரைக்கதை அமைத்திருந்தார்.
ஏஆர் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இன்றளவும் இந்த ஆல்பம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவாஜி திரைப்படம் மீண்டும் தெலுங்கில் ரீரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.