Homeசெய்திகள்சினிமாசெம ஜாலி பண்றாங்களே... ஜெயிலர் முதல் பாடல் அப்டேட் கொடுத்த அனிருத்!

செம ஜாலி பண்றாங்களே… ஜெயிலர் முதல் பாடல் அப்டேட் கொடுத்த அனிருத்!

-

- Advertisement -

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் திரையிடப்பட இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
அதைத் தொடர்ந்து, சமீபத்தில் நெல்சனின் வழக்கமான பாணியில் முதல் பாடல் குறித்த அப்டேட் ஜூலை 2ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கள் தயாராக உள்ளதாகவும், அதற்கான அனவுன்ஸ்மென்ட் வீடியோ நாளை (ஜூலை 3) மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது அந்த அனவுன்ஸ்மென்ட் ப்ரோமோ வீடியோக்கும் ஒரு ப்ரோமோ வீடியோ தயாராகி உள்ளதாக, அந்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ