Homeசெய்திகள்சினிமாரஜினிக்காக அதிரடியான கதையுடன் களமிறங்கிய நெல்சன்....... ஜெயிலர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினிக்காக அதிரடியான கதையுடன் களமிறங்கிய நெல்சன்……. ஜெயிலர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார். கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் காவாலா எனும் ஃபர்ஸ்ட் சிங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று ஹுக்கும் என்ற செகண்ட் சிங்கள் வெளியாகி காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை சம்பந்தமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலிப் குமார் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாத காரணத்தால், அந்த வெற்றியை ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் திரும்ப பெரும் முயற்சியில் ஈடுபட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக அதிரடியான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார்.
அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தின் கதையானது, சிலை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

அதாவது சிலை கடத்தலில் ஈடுபடும் கும்பலில் ஒருவர் ரஜினி ஜெயலராக இருக்கும் ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அவரை மீட்பதற்காக ஒரு கும்பல் ஈடுபடுகிறது. அந்த சமயத்தில் ரஜினிக்கும் அந்த கும்பலுக்கும் இடையே ஏற்படும் மோதல் தான் ஜெயிலர் படக்கதையாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ