நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரஜினியின் 170 வது படமாகும். இதனை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதற்கான மொழி ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் அதை தொடர்ந்து வெளியான ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மனசிலாயோ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதாவது இந்த பாடல் ஏஐ மூலம் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் யுகேந்திரன் வாசுதேவன், அனிருத், தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
5️⃣0️⃣ Million views and counting. 🤩 #MANASILAAYO 🥁 from VETTAIYAN 🕶️ is breaking records and hearts alike. 🔥#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/OGeMa46Dt5
— Lyca Productions (@LycaProductions) October 5, 2024
இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இந்த பாடல் யூட்யூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. எனவே இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள “அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்” என்ற வரிகளைப் போல் ரிலீஸுக்கு முன்னரே வேட்டையன் படம் வேட்டையாடத் தொடங்கிவிட்டது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.