Homeசெய்திகள்சினிமாரஜினி தங்க இதயம் கொண்டவர்... ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சந்திரபாபு நாட்டு!

ரஜினி தங்க இதயம் கொண்டவர்… ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சந்திரபாபு நாட்டு!

-

- Advertisement -

தெலுங்கில் பழம்பெரும் நடிகரான என்டி ராமாராவ் நூற்றாண்டு விழாவில் ரஜினி சில தினங்களுக்கு முன்பு கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய ரஜினி “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்குப் பார்வை காரணமாகவே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக, நியூயார்க் நகரம் போல் வளர்ச்சி அடைந்துள்ளது” என்று கூறினார்.

இதனால் கோபமான ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, “ஒரு நடிகராக ரஜினி மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், அவருக்கு ஆந்திரப்பிரதேச அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை. ரஜினி பேசி பேசி தான் அழிந்துபோனார்” என்று பேசினார்.

தற்போது இதற்கு சந்திரபாபு நாய்டு பதில் அளித்துள்ளார். “பழம்பெரும் சூப்பர் ஸ்டாருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள் கூறிய இழிவான மற்றும் மோசமான கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

ரஜினிகாந்த் அவர்கள் நேர்மை, நேர்மை, பணிவு ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்.

ரஜினிகாந்த் தங்க இதயம் கொண்டவர் மற்றும் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைவராலும் மிகவும் நேசிக்கப்படுகிறார். அவர் மீது திட்டமிட்ட தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. YS ஜெகனின் வக்கிர கும்பல் விரக்தியின் அடையாளம் மற்றும் YSRCP அதன் தரத்தை இழந்து வருவதைக் காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ