தெலுங்கு திரை உலகில் நடிகர் ராம் சரண் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியான கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் ராம் சரண். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்தார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ராம் சரண் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருந்தார். மேலும் கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடித்திருந்தனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இந்நிலையில் நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு உதவ முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது கேம் சேஞ்சர் திரைப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக தில் ராஜு தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிகர் ராம்சரண் குறைவான சம்பளத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என புதிய தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -