நடிகர் ராம் சரண், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் வலம் வரும் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவரது அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. தற்போது இவர் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் கைதி 2, சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் போன்ற படங்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க பிரபாஸ், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்றவரும் வரிசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர லோகேஷ் கனகராஜ், அஜித்தை எப்போது இயக்குவார்? என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படமானது நேரடி தெலுங்கு படமாக உருவாக இருப்பதாகவும் இதனை ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.