Homeசெய்திகள்சினிமாராம்சரண் நடிப்பில் உருவாகும் 'கேம் சேஞ்சர்'.... ட்ரைலர் ரிலீஸ் எப்போது?

ராம்சரண் நடிப்பில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’…. ட்ரைலர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராம்சரண் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ராம்சரண் நடிப்பில் உருவாகும் 'கேம் சேஞ்சர்'.... ட்ரைலர் ரிலீஸ் எப்போது?அரசியல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் ராம்சரண் மூன்று தோற்றங்களில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இதற்கு இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரம்மாண்டமாகவும் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.ராம்சரண் நடிப்பில் உருவாகும் 'கேம் சேஞ்சர்'.... ட்ரைலர் ரிலீஸ் எப்போது? இதற்கிடையில் படத்திலிருந்து டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ