ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ராம்சரண் தற்போது RC 16, RC 17 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆக்ஷன் கலந்த அரசியல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து டீசரும் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடைசியாக சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதால் கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது. எனவே ரசிகர்கள் பலரும் இந்த படத்தினை திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.