Homeசெய்திகள்சினிமாஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண்..... வசூல் வேட்டையை தொடங்கிய 'கேம் சேஞ்சர்'!

ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண்….. வசூல் வேட்டையை தொடங்கிய ‘கேம் சேஞ்சர்’!

-

- Advertisement -

கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண்..... வசூல் வேட்டையை தொடங்கிய 'கேம் சேஞ்சர்'!ராம் சரண் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் தான் கேம் சேஞ்சர். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் நேற்று (ஜனவரி 10) பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை சங்கர் இயக்கத்தில் தில் ராஜு படத்தை தயாரித்திருந்தார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க இவருடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த அரசியல் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் ஓரளவிற்கு தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண்..... வசூல் வேட்டையை தொடங்கிய 'கேம் சேஞ்சர்'!இருப்பினும் இந்த படம் வெளியான முதல் நாளில் தெலுங்கில் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. தமிழில் ரூ. 2 கோடியும் ஹிந்தியில் ரூ. 7 கோடியும் வசூல் செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டுமே இப்படம் கிட்டத்தட்ட ரூ. 50 கோடியை நெருங்கி உள்ளதாகவும் உலகம் முழுவதும் ரூ. 70 கோடியை கடந்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ