Homeசெய்திகள்சினிமாராம் பொத்தினேனி நடிக்கும் 'டபுள் இஸ்மார்ட்'.... அதிரடியாக வெளியான புதிய ரிலீஸ் தேதி!

ராம் பொத்தினேனி நடிக்கும் ‘டபுள் இஸ்மார்ட்’…. அதிரடியாக வெளியான புதிய ரிலீஸ் தேதி!

-

- Advertisement -

ராம் பொத்தினேனி நடிக்கும் டபுள் ஸ்மார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ராம் பொத்தினேனி நடிக்கும் 'டபுள் இஸ்மார்ட்'.... அதிரடியாக வெளியான புதிய ரிலீஸ் தேதி!

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொத்தினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து டபுள் இஸ்மார்ட் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படமானது 2019ல் வெளியான இஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இந்த படத்தை விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் சார்மி கார் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார்.ராம் பொத்தினேனி நடிக்கும் 'டபுள் இஸ்மார்ட்'.... அதிரடியாக வெளியான புதிய ரிலீஸ் தேதி!பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் கடந்த மார்ச் 8ஆம் தேதியே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இப்படம் ஆனது 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது. இதனை பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ