Homeசெய்திகள்சினிமாராம்சரண், சங்கர் கூட்டணியின் 'கேம் சேஞ்சர்'.... நாளை வெளியாகும் அறிவிப்பு!

ராம்சரண், சங்கர் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’…. நாளை வெளியாகும் அறிவிப்பு!

-

- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.ராம்சரண், சங்கர் கூட்டணியின் 'கேம் சேஞ்சர்'.... நாளை வெளியாகும் அறிவிப்பு! அதே சமயம் இவர் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தையும் இயக்கி வந்தார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா போன்ற பல காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில் படக்குழுவினர் இந்த படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகும் என்ற அப்டேட்டை கொடுத்திருந்தனர். இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (செப்டம்பர் 25) வெளியாகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ராம்சரண், சங்கர் கூட்டணியின் 'கேம் சேஞ்சர்'.... நாளை வெளியாகும் அறிவிப்பு! அது மட்டும் இல்லாமல் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாவது பாடலும் அடுத்தது ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல் ராம்சரண் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ