Homeசெய்திகள்சினிமாஇட்லி வடை ராம்சரண்... ஷாருக்கானை வறுத்தெடுக்கும் ராம்சரண் ரசிகர்கள்...

இட்லி வடை ராம்சரண்… ஷாருக்கானை வறுத்தெடுக்கும் ராம்சரண் ரசிகர்கள்…

-

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரண், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர் .ஆர். ஆர் திரைப்படத்தின் வழியாக அவர் உலக அளவில் பிரபலமானார். நடிப்பைத் தாண்டி சினிமாவில் பல்வேறு தைரியமான முயற்சிகளுக்காகவும் ராம் சரண் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் அவருக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். முன்னதாக மாவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் பெற்ற ராம் சரண், இந்த முறை ஒரு சிறப்பான அரசியல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ராமுக்கு ஜோடியாக கியாரா அத்வாணி நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராம்சரண் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது, சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான், ராமசரண் ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். இதற்காக ராம்சரணை நடனம் ஆடும்படி ஷாருக்கான் மேடைக்கு அழைத்திருக்கிறார். அப்போது, மைக்கில் இட்லி, வடை சாம்பார் ராம்சரண் என்று அழைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய நடிகர்களை அவமதிக்கும் விதமாக ஷாருக்கான் நடந்து கொண்டதாக, ராம்சரண் ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். மற்றொரு பக்கம் அவர் தென்னிந்தியர்களை பெருமைப்படுத்தும் விதமாகத் தான் இவ்வாறு அழைத்தார் எனவும் ஷாருக்கானின் ரசிகர்கள் பதிவிடுகின்றனர்.

MUST READ