Homeசெய்திகள்சினிமாராம் இயக்கத்தில் உருவாகும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

ராம் இயக்கத்தில் உருவாகும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

-

- Advertisement -

ராம் இயக்கத்தில் உருவாகும் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி உள்ளது.

ராம் இயக்கத்தில் உருவாகும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் ராம். இவர் தற்போது நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நடிகர் சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ளது. ராம் இயக்கத்தில் உருவாகும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!வி எஸ் மதி இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். சமீபத்தில் இத்திரைப்படம் நெதர்லாந்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் மறுபடி நீ எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை மதன் கார்த்தி எழுதியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜாவும் சித்தார்த்தும் இணைந்து பாடியுள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ