நடிகை ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதன்படி டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு SK 24 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் வெளியான டான் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படம் தொடர்பாக வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதாவது அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடிக்கப் போகிறார்கள் என ஏற்கனவே தகவல் கசிந்தது. அதை தொடர்ந்து தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.