Homeசெய்திகள்சினிமாயோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்!

யோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்!

-

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.யோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் படித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அடுத்தது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானார். இருப்பினும் சமீப காலமாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரம்யா பாண்டியன், திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் நீண்ட நாள் காதலனை திருமணம் செய்ய போகிறாராம். அந்த காதலர் யார் என்று கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். யோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்!பஞ்சாபை சேர்ந்த நோபல் தவானை திருமணம் செய்யப் போகிறாராம் ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மேற்கொள்ளும் போது அங்கு யோகா மாஸ்டராக பணியாற்றி வந்த நோபல் தவவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையில் காதல் மலர்ந்தாக  சொல்லப்படுகிறது.மேலும் இவர்களின் திருமணம் வருகின்ற நவம்பர் 8ம் தேதி ரிஷிகேசில் கங்கை நதி ஓரம் அமைந்திருக்கும் கோவிலில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கடந்து நவம்பர் 15 ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது.

MUST READ