மாநாடு இந்தி ரீமேக்கில் ராணா மற்றும் ரவி தேஜா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2021-ல் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. எஸ்ஜே சூர்யா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.டைம் ட்ராவல் கதைகளத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. யுவனின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. சிம்புவுக்கு சமமாக எஸ்ஜே சூரியாவும் பல இடங்களில் ஸ்கோர் செய்திருந்தார்.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்தி ரீமேக்கில் ரவி தேஜா, எஸ்ஜே சூர்யா கதாபாத்திரத்திலும் வருண் தவான் சிம்பு கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
தற்போது சிம்பு கதாபாத்திரத்தில் ராணா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ராணா மற்றும் ரவி தேஜா இருவரும் தெலுங்கு நடிகர்களாக இருந்தாலும் இந்தி ரீமேக்கில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.