Homeசெய்திகள்சினிமாஓடிடி தளத்தில் அதிரடியாக வெளியானது அனிமல்...

ஓடிடி தளத்தில் அதிரடியாக வெளியானது அனிமல்…

-

ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள அனிமல் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

டோலிவுட்டில் இருந்து கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலமும் சென்று அனைத்து மொழி ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தை இயக்கியவர் சந்தீப் கெட்டி வங்கா. மாறுபட்ட கண்ணோட்டத்தில் படத்தை இயக்குபவர் சந்தீப். இப்படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்று ரீமேக் செய்தார்.

இதைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. பலர் படத்திற்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். படத்தை தடை செய்யவும் கூறினர்.

இருப்பினும் அனிமல் திரைப்படம் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ