அனிமல் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் அனிமல் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படத்தின் கிளிம்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நேற்று ரன்பீர் கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகி உள்ளது. நாயகி ரஷ்மிகா மந்தனா நாயகன் ரன்பீர் கபூருடன் பேசுவது போன்ற காட்சியுடன் டீசர் தொடங்குகிறது.
Tamil teaser 🙂https://t.co/7BMWJM5ezD
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) September 28, 2023
ரஷ்மிகா ரன்பீர் தந்தையைப் பற்றி தவறாக கூற அதனை எதிர்த்து ரஷ்மிகாவை மிரட்டுகிறார் ரன்பீர்.ஒரு பணக்கார குடும்பத்தில் ஸ்ட்ரிக்ட் ஆன தந்தையான அணில் கபூருக்கு பிடிக்காத மகனாக ரன்பீர் கபூர் காட்டப்படுகிறார். தந்தையிடம் அடி வாங்குவது போலவும் திட்டு வாங்குவது போலவும் டீசரில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நொடியிலேயே ஒரு ஸ்டைலிஷ் ஆன கேங்ஸ்டர் லுக்கில் தோன்றுகிறார் ரன்பிர் கபூர். அதன்பின் ஆக்சன் அவதாரம் எடுக்கிறார். டீசரின் முடிவில் வாயில் சிகரெட்டுடன் எதிரிகளின் கேங்கை துப்பாக்கியால் தாக்குவது போன்ற காட்சி அமைப்பு கைதி, கே ஜி எஃப், விக்ரம், மார்க் ஆண்டனி படங்களை ஞாபகப்படுத்துகிறது.இப்படம் தந்தை மகன் பாசப்பிணைப்பை ஒரு தனித்துவமான கோணத்தில் காட்டும் ஆக்சன் படமாக இருக்கும் என டீசரிலையே தெரிகிறது.