Homeசெய்திகள்சினிமாரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'அனிமல்'..... டீசர் ரிலீஸ் அப்டேட்!

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அனிமல்’….. டீசர் ரிலீஸ் அப்டேட்!

-

அனிமல் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதிக எக்ஸ்பெக்டேஷன் உடன் உருவாகி வருகின்ற தென்னிந்தியா திரைப்படம் அனிமல். பாலிவுட் நட்சத்திரமான ரன்பீர் கபூர் நடிப்பில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி புகழ் பெற்ற சந்திப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. ஒரு மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவில் நீளமான வாளால் ஒரு கும்பலையே சரமாரியாக வெட்டி ரத்தம் தெறிக்கும் படியாக அந்த டீசர் அமைந்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர். ரிலீசுக்கு இரண்டு மாதங்களை உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வர உள்ளன. இதன் முதல் படியாக படத்தின் டீசர் வெளியாக உள்ளது.அதன்படி இப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 28 அன்று வெளியாக உள்ளது. காலை 10 மணிக்கு இந்த டீசர் வெளியாகும் எனவும் அறிவித்து ஒரு புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்த அதே தோற்றத்திலேயே ரன்பீர் கபூர் இந்த போஸ்டரிலும் இருக்கிறார். ஸ்டைலிஷான கேங்ஸ்டர் லுக்கில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் பெருமளவு பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ