Homeசெய்திகள்சினிமாரன்பீர் கபூரின் 'அனிமல்' பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

-

- Advertisement -
kadalkanni

ரன்பீர் கபூரின் அனிமல் பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?ரன்பீர் கபூர் நடிப்பில் பான் இந்தியா அளவில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் அனிமல். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரன்வீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்த நாள் முதல் பல்வேறு தரப்பு நேரடையை எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் வன்முறை காட்சிகளும் ஆபாச காட்சிகளும் நிறைந்திருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இப்படத்தை வறுத்து எடுத்து வருகின்றனர். ஆனால் இப்படம் வட இந்தியாவில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பி வருகிறது. வெளிநாடுகளிலும் இப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. அந்த வகையில் இந்த படம் 17 நாட்களில் உலகம் முழுவதும் 817 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. விரைவில் படம் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரன்பீர் கபூரின் அனிமல் பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்நிலையில் அனிமல் திரைப்படமானது 2024 ஜனவரி 26 அன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

MUST READ