பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் பிரபல நடிகை தீபிகா படுகோனின் கணவரும் ஆவார். இவர் கடைசியாக ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக ராமாயண கதையில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதன்படி இந்த புதிய படத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீராமனாக நடிப்பதாகவும் சாய்பல்லவி இதில் சீதையாக நடிப்பதாகவும் நடிகர் யாஷ் இதில் ராவணனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆபாச நடிகருடன் ரன்வீர் சிங் நடித்த விளம்பரம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆபாச நடிகர் ஜானி சின்ஸ் உடன் இணைந்து ரன்வீர் சிங் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதுவும் இது பாலியல் ஆரோக்கியத்திற்காக விற்கப்படும் மருந்துகள் தொடர்பான விளம்பரமாகும். சீரியல் பாணியில் வெளியான இந்த விளம்பரம் ஒரு பக்கம் சிரிப்பை வரவழைத்தாலும் ரன்வீர் சிங் இப்படி இறங்கிட்டாரே என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . ரன்வீர் சிங் ஏற்கனவே கடந்த ஆண்டில் அரை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அது சர்ச்சையை ஏற்படுத்தி பேசு பொருளானது. இந்நிலையில் ஆபாச நடிகருடன் இணைந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.