Homeசெய்திகள்சினிமாரன்வீர் சிங் உடன் ஆக்ஷனில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்!

ரன்வீர் சிங் உடன் ஆக்ஷனில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்!

-

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் மற்றும் ரன்வீர் சிங் இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் விளம்பரம் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ரன்வீர் சிங் ஒரு விளம்பரத்திற்காக இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். ராஜேஷ் சாத்தி இயக்கிய, இந்த விளம்பரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் இதுவரை காணப்படாத அதிரடி ஆக்ஷன் அவதாரத்தில் காணப்படுகிறார் இந்த விளம்பரத்தில். மாடிக்கு மாடிக்கு அசால்ட்டாக தாவுகிறார். ஆனால் அது டூப் தான் என்று தெரியும். இருப்பினும் காட்சியாக பார்க்கும் போது அசத்தலாகத் தெரிகிறது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ரன்வீர் சிங் ஜோடி சேருவது இதுவே முதல் முறை.
கோடக் மஹிந்திரா வங்கியின் விளம்பர விளம்பரத்திற்காக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

கீர்த்தி மற்றும் ரன்வீர் இருவரும் முன்பு ஒரு விருது நிகழ்ச்சியில் மேடையை பகிர்ந்து கொண்டனர், அங்கு அவர்கள் விஜய்யின் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடினார்கள். நிகழ்ச்சியின் போது, ரன்வீர் கீர்த்திக்காக பாடினார் மற்றும் கீர்த்தியை மிகவும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது

MUST READ