Homeசெய்திகள்சினிமாசொல்ல வார்த்தைகள் இல்லை.... மனைவியுடன் கல்கி படத்தை கண்டு ரசித்த ரன்வீர் சிங்...

சொல்ல வார்த்தைகள் இல்லை…. மனைவியுடன் கல்கி படத்தை கண்டு ரசித்த ரன்வீர் சிங்…

-

- Advertisement -
மனைவியுடன் கல்கி 2898AD திரைப்படத்தை கண்டு ரசித்த நடிகர் ரன்வீர் சிங், படத்தையும், படக்குழுவையும் பாராட்டி இருக்கிறார்.  
இந்திய திரையுலகில் டாப் நட்சத்திரமாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட தீபிகா, இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று டாப் நடிகையாக உருவெடுத்துள்ளார். பாலிவுட்டில் உச்சம் தொட்ட அவர், ஹாலிவுட்டிலும் நடித்திருக்கிறார். உடன் நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கையே அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருமே பிசியாக நடித்து வருகின்றனர்.
மேலும், நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தீபிகா நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் கல்கி. பிரபாஸ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். மேலும், இப்படத்தில் அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது. இந்நிலையில், கல்கி படத்தை தனது மனைவி தீபிகாவுடன் நடிகர் ரன்வீர் சிங் கண்டு களித்தார். படத்தை ரசித்த அவர், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி இருக்கிறார். மேலும், தனது மனைவி தீபிகாவின் நடிப்பையும் அவர் புகழ்ந்துள்ளார். சொல்ல வார்த்தைகள் இல்லை, அழகுடனும், நேர்த்தியுடனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என அவர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

MUST READ