நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதற்கிடையில் இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டது. அரண்மனை படத்தின் மற்ற 3 பாகங்களை போல் இந்த படமும் திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரும் அதைத்தொடர்ந்து அச்சச்சோ எனும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வருகின்ற மே 3ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷி கண்ணா, “அரண்மனை 4 படத்தில் நடிக்க சுந்தர் சி சார் என்னை அழைத்தபோது கதையே கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன். தற்போது இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -