Homeசெய்திகள்சினிமாஜப்பான் சென்ற ராஷ்மிகா... நெகிழ வைத்த ரசிகர்கள்...

ஜப்பான் சென்ற ராஷ்மிகா… நெகிழ வைத்த ரசிகர்கள்…

-

விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற ராஷ்மிகா மந்தனாவிற்கு, அங்கிருந்த ஜப்பானிய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இறுதியாக அவரது நடிப்பில் அனிமல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது தி கேர்ள் பிரண்ட், ரெயின்போ, புஷ்பா இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற அனைத்துலக அனீம் திரைப்பட விருது விழாவில் பங்கேற்க விமானத்தில் சென்றிருந்தார்.

டோக்கியோ விமானம் நிலையம் சென்றடைந்த ராஷ்மிகா மந்தனாவிற்கு, அங்கிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர், ராஷ்மிகாவின் புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்ட அட்டைகளை கைகளில் ஏந்தியும் பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதை எதிர்பார்க்காத ராஷ்மிகா மந்தனா இந்த வரவேற்பை கண்டு நெகிழ்ந்துபோனார். இதைத் தொடர்ந்து விருது விழாவில் பங்கேற்று விருது வழங்கினார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது.

MUST READ